2022 சர்வதேச உலக மகளிர் தினம் – மார்ச் 8 “நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்.”
2022 சர்வதேச உலக மகளிர் தினம் – மார்ச் 8
“நிலையான நாளைக்காக இன்று பாலின சமத்துவம்.”
நல்லாயண் ஆராய்ச்சி தங்கு நிலையம்
காலநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவற்றின் பின்னணியில் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய உலகளாவிய சவால்களில் ஒன்றாகும். இந்த மாற்றங்கள் ஏற்படும் போது அதிக சவால்களை எதிர்நோக்க வேண்டி வருகின்றது. குறிப்பாக நலிந்தவர்களாக கருதப்படுபவர்கள் பெண்கள் குழந்தைகள் இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவற்றின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் பாலின சமத்துவத்தை அடைதல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் “. என்பதை கருத்திக் கொண்டு தான் இந்த 2022 வருட சர்வதேச உலக மகளிர் தினம் மார் 8 ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டும். மகளிர் தினத்தை கொண்டாட கழகத்தின் நல்லாயன் பண்ணை பொருத்தாமாக இருக்கும் என்ற வகையில் திட்டமிடப்பட்டதுடன் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணி செய்த திரு பத்மநாதன் அவர்கள் இந்தப் பண்ணைக்கு இன்றைக்கு வந்திருக்கின்ற காரணத்தை கூறும்போது வேலைப்பளு அதிகமாக தலைமை அலுவலகத்தில் இருக்கின்றவர்கள் அதனை மறந்து இந்த இடத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுடைய உள்ளார்ந்த கருத்துகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
மார்ச் 8ஆம் திகதி தலைமை அலுவலகத்திலிருந்து தொண்டர்கள் 11.30 மணிக்கு புறப்பட்டு நல்லாயன் பண்ணையை அடைந்தோம். பொருளாளர் மற்றும் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டார்கள். புழல் முகாமில் இருந்து ஆசிரியை திருமதி.ஜெயதேவி மற்றும் திருமதி.பத்மநாதன், சிறுவன் குமுதன் ஆகியோரும் எங்கள் பயணத்தில் இணைந்து கொண்டார்கள். சிறப்பு என்னவெனில் இந்த பண்ணை குடும்பத்துடன் இணைந்து கொண்டுவதே. வரவேற்பு பகுதியில் திருமதி.இலக்கியா நின்று அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அருமையான மதிய உணவை முடித்துக் கொண்டு 3 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது . நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணியை திரு.பத்மநாதன் மேற்கொள்ள நிகழ்ச்சியின் துவக்கமாக முதலில் அனைவரையும் திரு.இரத்தினராஜ சிங்கம் அவர்கள் வரவேற்று பேசினார் .
அதனைத் தொடர்ந்து செல்வி தேன்மொழி 2022 சர்வதேச உலக மகளிர் தினத்தின் கருப்பொருளை விளக்கினார் . ஆபத்துக்கள் வருகின்ற போது ஆண்கள் மட்டுமே பலசாலிகளாக இருக்காமல் பெண்களும் அதனை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாளில் முகாம்களில் இந்த தினத்தை இருபாலருமாக சிறப்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள். 2030 ஆண்டில் சமூதாய வளர்ச்சி என்பதில் பாலின சமத்துவம் என்பது முக்கிய பங்கை வகிக்கின்றது. நிலையான அபிவிருத்தி, காலநிலை மாற்றத்தின் புரிதல், சுற்றுச்சூழல் தடுப்பு நடவடிக்கை இவைகளின் மாற்றத்தினை பாலின சமத்துவமாகவே கொண்டு வர வேண்டும் என்பதை கூறி அனைவருக்கும் மகளிர் தினத்தின் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார். அடுத்த நிகழ்ச்சியாக கழகத்தின் மகளிர்கள் புழல் முகாம் மகளிர்கள் அனவைரும் இணைந்து பெண்ணொன்று குப்பை அல்ல என்ற ஒரு பாடலை பாடினார்கள்.
தொடர்ந்து கழகச் செயலாளர் அவர்கள் கருத்து கூறுகையில் இந்தக் கழகம் ஆரம்பித்தது முதல் கழகத்தின் பொருளாளர் அவர்கள் பாலின சமத்துவம் என்பதை தன்னுடைய பணியில் கழகத்தின் பணியில் நிலைநாட்ட வேண்டும் என்பதை அதிகமாக உறுதியாக கொண்டவர். அதேபோன்றுதான் இன்றுவரையும் கழகத்தில் இருப்பவர்களும் பணியாளர்களும் இருக்கின்றார்கள் . எடுத்துக்காட்டாக முகாம்களில் பெண்கள் முன்வந்து பல பணிகளில் ஈடுபடுகின்றார்கள். இது கழத்தின் பெரிய வெற்றியாக அமைந்திருப்பது. அது குறையாமல் இருப்பதற்கு நல்ல முடிவுகளை எடுப்பதற்கு பாலின சமத்துவம் என்பதை புரிந்து அதனை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்பதை தெளிவுபடுத்தினார் . ஆனாலும் இப்படியாக மாறி வரும் பொழுது முகாம் மட்டத்தில் இருக்கக்கூடிய பல சவால்களையும் அவர் முன்வைத்தார் .
அதனை குறைப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். முதலில் நாம் அந்தப் பிரச்சினைகள் குறித்து அறிந்து இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் கருத்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முகாம் சூழலில் இருப்போர் தற்போது முகாம்களில் நடந்து வரும் பிரச்சனைகளை முன் வைத்தார்கள். நேரம் குறைவாக இருந்த காரணத்தினால் . இந்தக் கருத்துகளை பதிவு செய்து கொண்டு வரப்போகும் மீளாய்வின் போது பேசலாம் என்ற பதிலை தெரிவித்தார். கழகச் செயலாளர் அவர்கள் இலங்கையில் பல நிகழ்வுகள் இருக்கின்ற போதிலும் . காணோளி வழியாக கலந்து கொண்டேன். இலங்கை கழகத்தின் மூலம் உதவி செய்த ஒரு பெண்ணின் வளர்ச்சி அதாவது அவர்கள் வருமானத்தில் முன்னேற்றம் அடைந்த கதையை நெகிழ்வுடன் கூறினார். தொடர்ந்து இந்தியாவில் அகதியாக வாழ்வது என்பது சவாலான விசயம். ஒரு கட்டத்தில் நாடு திரும்புவது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். நல்ல முடிவுகளை எடுப்பதற்கு பாலின சமத்துவம் முக்கிய பங்கு வகிக்கின்றது கூறி அமர்ந்தார்.
தொடர்ந்து திரு.இரத்தின ராஜசிங்கம் அவர்கள் இந்தப் பண்ணையின் வளர்ச்சியை கூறி காலநிலை மாற்றத்திற்கு பொருந்தும் வகையில் ஐயா மற்றும் மிஸ் ஆகியோரை அழைத்து இரண்டு மா மரங்கள் நடப்பட்டது. கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவரும் கையொலி எழுப்பி ஆரவாரம் செலுத்தினர். இதனை முடித்துக்கொண்டு வட்டவடிவமான நிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது.
திரு பத்மநாதன் திரு.சாம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் கழகத்தில் மற்றும் பண்ணையில் பணிபுரியும் அனைத்து ஆண் தொண்டர்கள் பெண்களை பாராட்டி அவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதன்முதலில் செயலாளர் அவர்களை பொருளாளர் அவர்கள் வாழ்த்தி அவருக்கான நினைவு பரிசை வழங்கினார் . செயலாளர் அவர்கள் முதன்முதலில் புழல் முகாமில் நோய் பாதிப்பு ஏற்பட்டபோது பெண்களாக முன்வந்து எப்படி அதை தடுத்தார்கள் என்ற செய்தியையும் தெரிவித்து இன்று மகளிர்கள் அனைவரும் தகைமையுடன் இருப்பதற்கு அன்று அவர் துணிவுடன் செயல்பட்டதும் ஒரு காரணமாக அமைந்திருக்கின்றது என்ற செய்தியை மகிழ்வுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து கழக துணைச் செயலாளர், துணைப் பொருளாளர் மற்றும் கழகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றும் மகளிர்கள் அதே போல பண்ணையில் நீண்ட நாட்கள் பணியாற்றி வரும் மகளிர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண் பணியாளர்களும் தங்களுக்கு வந்த பெண் பணியாளர்களை பெயரை வாசித்து அவர்களது நற்குணங்களை அறிவித்து அவர்களுக்கான நினைவு பரிசில்களை வழங்கினார்கள்.
மேலும் பண்ணையில் பணியாற்றி வரும் மகளிர்கள் அனவைருக்கும் செயலாளர் அவர்கள் பாராட்டி பரிசுகள் சிறப்பு பரிசு வழங்கினார். திரு.இரத்தினராஜசிங்கம் அவர்களும் பண்ணையின் வளர்ச்சிக்காக நீண்ட நாள் பயணிக்கின்றவர்கள் இவர்கள் என வாழ்த்தினார்.
இருள் சூழ்ந்த வேளையாக இருந்தாலும் இன்றைய நாள் உண்மையாக மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆஸ்திரேலியா தடுப்புக்கான நடவடிகை பற்றி ஆங்காங்கே பேணர் வைக்கப்பட்டிருந்தது. கோசங்கள் எழுப்பட்டது. செல்வி.சங்கவி, செல்வன் சஞ்சய் மற்றும் லெனின் ஆகியோரின் நடனம் அனைவரையும் கண் மூடாமல் பார்க்கத் வைத்தது. அவர்களுக்கு பாராட்டுக்கள்
இறுதியாக செல்வி.தேன்மொழி நன்றி தெரிவித்ததுடன் கும்மியடி பெண்ணே கும்மியடி என்ற பாடல் அனைத்து மகளிராலும் பாட நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது .