
முக்கிய அறிவிப்பு – கும்மிடிப்பூண்டி
முக்கிய அறிவிப்பு
திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பேத்திக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் முகாம் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணக்கொடை வழங்கப்படும் நிலையில் முகாமைச் சேர்ந்த சில நபர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே மேற்படி பணக்கொடை பெரும் மக்களிடமிருந்து சந்தா தொகை வசூல் செய்வதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்படி சந்தா தொகை இனி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் வசூலிக்கப்படக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் “கியூ” பிரிவு போலீசாரிடம் இருந்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது அரசிற்கெதிரானது என்றும் இந்த செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.