08 Dec
  • By OfERR 1 web
  • Cause in

Transfers to Papua New Guinea’s Manus Island – Australian Government’s New Arrangement.

கடல்வழி ஆட்கடத்தலை முறியடிப்பதற்கும், அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்குமான இராணுவ முனைப்புடன் கூடிய ஒரு பாதுகாப்பு நடவடிக்கையே எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாகும் (OSB).

OSB, 18 செப்ரெம்பர் 2013 இல் உருவாக்கப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத கடல்வழி முயற்சிகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகக் குறைத்துள்ளதுடன், கடலில் உயிர் இழப்பைத் தடுத்துள்ளது.

ஆட்கடத்தும் குற்ற நடவடிக்கையை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உறுதி கொண்ட வண்ணம் உள்ளது. அவுஸ்திரேலியாவுக்குப் படகுவழியாக விசா இல்லாமல் வர எத்தனிக்கும் எந்தவொரு நபரும், அவர் புறப்பட்டு வந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்.