25 Dec
  • By OfERR 1 web
  • Cause in

நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள் – எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை (அவுஸ்திரேலிய அரசாங்கம்)

நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள்

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை

கடலில் உயிர் அழிவைத்தடுக்கவும், ஆட்கடத்துவோரின் திட்டங்களைச் செயலிழக்கச் செய்யவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் கடுமையான எல்லைப்பாதுகாப்பு செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.

எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் (OSB), சட்டவிரோதமாகப் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்தவொரு நபரும், அவர் புறப்பட்டு வந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்.

சட்டவிரோதமாகப் படகுமூலம் பயணிக்கும் எந்தவொரு நபருக்கும் அவுஸ்திரேலியாவில் செயல்முறை மற்றும் மீள்குடியேற்றம் ஒருபோதும் அவரின் விருப்பத்தேர்வாகாது.

அவுஸ்திரேலியா தனது எல்லைகளைப் பாதுகாக்கவும், ஆட்கடத்தும் குற்றசெயலுக்கு முடிவுகட்டவும் உறுதிபூண்டவண்ணம் உள்ளது.

சட்டவிரொதமாக, படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதுபற்றி ஆலோசிக்கும் ஆட்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவைத் தமது வசிப்பிடமாக்கிக்கொள்ள முடியாதென அறிவிப்பதற்காக பல்வேறு கடல்கடந்த செய்திபரிமாற்று செயற்பாடுகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளியிடுகிறது.

ஆட்கடத்துவோரின் பொய்களை நம்பாதீர்கள்

அவுஸ்திரேலியா தனது கொள்கையைக் காலப்போக்கில் இலகுவாக்கிவிடுமென ஆட்கடத்துவோர் உங்களுக்குச் சொல்வார்கள். அவுஸ்திரேலியா தனது கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவுமில்லை, மாற்றப்போவதுமில்லை.

சட்டவிரோதமாகப் படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர முயற்சிக்கும் எந்தவொரு நபரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்.

உறவினர், குழந்தைகள், கூடிவராத சிறுவர்கள், படித்தவர்கள் மற்றும் திறமைசாலிகள் அனைவருக்கும் இந்த விதிகள் ஏற்புடையதாகும். விதிவிலக்குகள் கிடையாது.

உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள். ஆட்கடத்துவோரின் பொய்களை நம்பாதீர்கள்.

இந்தோனேசியாவில் UNHCR உடன் பதிவுசெய்த்தல்

அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்தோனேசியாவிலிருந்து வரும் அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்கான அதன் விதிகளை மாற்றியுள்ளது.

நீங்கள் இந்தோனேசியாவுக்குப் பயணித்து 1 யூலை 2014 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ இந்தோனேசியாவில் UNHCR உடன் பதிவை மேற்கொண்டிருந்தால் நீங்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியேற்றத்திற்காகக் கவனிக்கப்படமாட்டீர்கள்.

இந்தோனேசியாவில் 1 யூலை 2014 க்கு முன்னர் UNHCR உடன் பதிவு செய்துகொண்டவர்களுக்கு அவுஸ்திரேலியாவால் வழங்கப்பட்ட மீள்குடியேற்றத்திற்கான இடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

 

இந்த விதிகள் எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் கிடையாது.

ஊடக வெளியீடு : http://osb.homeaffairs.gov.au/~/media/Files/OSB/Media-Release/Tamil-Media-release.ashx?la=ta-IN
தகவல் தாள் : http://osb.homeaffairs.gov.au/Outside-Australia/Outside-Australia-fact-sheet